இந்தியா செய்திகள் - இந்தியாவின் லடாக் எல்லைக்குள் இம்மாதம் 8ஆம் தேதி நுழைந்து சீன வீரரை இந்திய ராணுவத்தினர் தடுத்து வைத்தனர். தவறுத... மேலும் வாசிக்க https://www.tamilmurasu.com.sg/இந்தியாவின் லடாக் எல்லைக்குள் இம்மாதம் 8ஆம் தேதி நுழைந்து சீன வீரரை இந்திய ராணுவத்தினர் தடுத்து வைத்தனர். தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்த அவரை ஒப்படைக்க வேண்டும் என்று சீனாவின் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில் சீன வீரரை முறைப்படி சீனாவிடம் நேற்று இந்திய ராணுவம் ஒப்படைத்தது. அண்மைய மாதங்களில் நடைபெற்ற இரண்டாவது சம்பவம் இது. கடந்த அக்டோபரில் லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர் ஒருவர் இந்திய எல்லைக்குள் பிடிபட்டு, பின்னர் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய எல்லைக்குள் பிடிபட்ட சீன வீரர் ஒப்படைப்பு, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu